பாலஸ்தீனிய போராளிகளின் ரொக்கெட் தாக்குதலுக்கு பின்னர், முற்றுகையிடப்பட்ட காசா பகுதியில் ஒரே இரவில் வான் தாக்குதலை நடத்தியதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.

பாலஸ்தீனிய போராளிகளால் வியாழக்கிழமை பிற்பகுதியில் இஸ்ரேல் நோக்கி இரு ரொக்கெட் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதில் ஒன்று இஸ்ரேலிய பாதுகாப்பு அமைப்பின் பதில் தாக்குதலால் தடுக்கப்பட்டுள்ளது, மற்றொன்று திறந்த பகுதியில் விழ்ந்தது.

இந் நிலையில் இந்த தாக்குதல்களுக்கு பதிலளிக்கும் விதமாக, எங்கள் விமானப்படைகள் காசாவில் அமைந்துள்ள ஹமாஸ் இயக்கத்தின் நிலையங்களை இலக்கு வைத்து தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக இஸ்ரேலிய இராணுவம் தனது டுவிட்டர் பதிவில் சுட்க்காட்டியுள்ளது.

இந்த தாக்குதலினால் உண்டான சேத விபரங்கள் வெளிப்படுத்தப்படவில்லை.