கொஸ்கமவில் அமைந்துள்ள கொரோனா சிகிச்சை நிலையத்தில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தப்பியோடிய கொரோனா தொற்று நோயாளர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர் பொரளையில் அமைந்துள்ள சஹாஸ்புர வீட்டுத் திட்டத்தின் 13 ஆவது மாடியிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கிராண்ட்பாஸ் பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய நபர் ஒருவரே கொஸ்கம, சாலாவ வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் இன்று அதிகாலை 6.00 மணியளவில் தப்பிச் சென்றவர் ஆவார்.

இவருக்கான சிகிச்சைகள் முடிவுற்றதன் பின்னர் தொற்று நீக்கம் மற்றும் நோய்தடுப்புச் சட்டத்தின் கீழ் அவருக்கு எதிராக வழக்கு தொடரவுள்ளதாக  பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.