காலி பிராதான தபால் நிலையத்தில் சேவையை பெற வந்த சேவை பெறுநர் ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் தபால் நிலையம் தற்காலிமாக மூடப்பட்டுள்ளது.

தபால் நிலையத்தை மூடுமாறு சுகாதார அதிகாரிகள் வழங்கிய அறிவுறுத்தலுக்கு அமைவாகவே இவ்வாறு காலி பிரதான தபால் நிலையத்தை தற்காலிமாக மூடியதாக தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.

ஒக்டோபர் 19 ஆம் திகதி தபால் நிலையத்திற்கு வந்த சேவைப் பெறுநர் ஒருவரே இவ்வாறு கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளார்.

இதன் விளைவாக தபால் நிலையம் மூடப்பட்டு, கிருமி தொற்று நீக்க நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதேவேளை தபால் நிலையத்தை மீண்டும் திறப்பதற்கான பேச்சுவார்த்தை நாளை முன்னெடுக்கப்படவுள்ளது.