கொரோனா வைரஸின் அச்ச நிலையை தொடர்ந்து பாணந்துறையில் உள்ள அனைத்து மீன் விற்பனை நிலையங்களையும் தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு அப்பகுதியில் கொரோனா பரவல் அச்சம் நிலவுவதால் குறித்த பகுதியில் பி.சி.ஆர் சோதனைகளும் நடத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் பேருவளை துறைமுகத்தில் இன்று மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் 20 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.