வடக்கில் தனது விசாரணைகளை ஆரம்பித்தது ஜனாதிபதி ஆணைக்குழு 

Published By: Priyatharshan

11 Dec, 2015 | 09:56 AM
image

( ஆர் . ராம் )

காணாமல்போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு வடக்கில் தனது விசாரணை நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

அதன்படி இன்றைய முதலாவது விசாரண யாழ்ப்பாணம் கச்சேரி கேட்போர் கூடத்தில் இடம்பெறுகின்றது. இதில் கலந்து கொள்வதற்காக 200 முதல்  300 பேர் காத்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

காணாமல்போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு வடக்கில் தனது விசாரணை நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்வதற்காக கச்சேரி கேட்போர் கூடத்தில் 5 பகுதிகளாக பிரிக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

குறித்த விசாரணை நடவடிக்கைகள் இன்று 11 ஆம் திகதி வெள்ளிக்கிழமை முதல் 16 ஆம் திகதி புதன்கிழமை வரை வடக்கில் இடம்பெறவுள்ளது.

யாழ். மாவட்டசெயலகத்தில் இன்று 11 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை  8.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை இடம்பெறும் அமர்வில் நல்லூர் பிரதேச சபையைச் சேர்ந்தவர்களும்  12 ஆம் திகதி  சனிக்கிழமை காலை 8.30 மணி முதல்  மாலை 5.30 மணி வரை யாழ். மாவட்டசெயலகத்தில் இடம்பெறும் அமர்வில் யாழ்.பிரதேச சபையைச் சேர்ந்தவர்களும்  13 ஆம் திகதி காலை  8.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை பருத்தித்துறை பிரதேச செயலகத்தில் இடம்பெறும் அமர்வில் கரவெட்டி மற்றும் மருதங்கேணி பிரதேசபைகளைச் சேர்ந்தவர்களும்  14 ஆம் திகதி  காலை 8.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை பருத்தித்துறை பிரதேச செயலகத்தில் இடம்பெறும் அமர்வில் வடமராட்சி வடக்கு பிரதேச சபையை சேர்ந்தவர்களும் 15 ஆம் திகதி  காலை 8.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை சங்கானை  பிரதேச செயலகத்தில் இடம்பெறும் அமர்வில் சண்டிலிப்பாய் மற்றும் சங்கானை பிரதேச சபைகளைச் சேர்ந்தவர்களும் 16 ஆம் திகதி  காலை 8.30 மணி முதல் மாலை 4 மணி வரை தெல்லிப்பளை பிரதேச செயலகத்தில் இடம்பெறும் அமர்வில் உடுவில் மற்றும் தெல்லிப்பளை பிரதேச சபைகளைச் சேர்ந்தவர்களும் கலந்துகொண்டு தமது முறைப்பாடுகளை சமர்ப்பிக்க முடியும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02
news-image

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கோழி இறைச்சி...

2024-04-18 17:43:51
news-image

மாளிகாகந்த நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேக...

2024-04-18 17:24:50