கொரோனா வைரஸ் நோயாளிகளின் சிகிச்சைக்கு ரெம்டெசிவிர் மருந்தினை வழங்க அமெரிக்கா முழு ஒப்புதல் அளித்துள்ளது.

இம்மருந்து நோய்த்தொற்று சிகிச்சைக்குப் பயன்படுத்தப்பட்டாலும், அதன் முடிவுகள் முழு பலனளிக்கும் வகையில் இல்லை என உலக சுகாதார அமைப்பு தெரிவித்து உள்ளது.

இந்த சூழலில், ரெம்டெசிவிர் தடுப்பு மருந்துக்கு அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து கழகம் முழு ஒப்புதல் வழங்கியுள்ளது.

"கொரோனா சிகிச்சைக்கு எங்களது ஒப்புதல் பெறும் முதல் மருந்து வெக்லரி (ரெம்டெசிவரின் வர்த்தக பெயர்)" என்று எஃப்.டி.ஏ வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

"12 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய, குறைந்தது 40 கிலோ உடல் எடை கொண்ட, மருத்துவமனை கவனிப்பு தேவைப்படும் கொரோனா நோயாளிகளுக்கு இதை பயன்படுத்தலாம்."

இதன்படி, கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நபர்களுக்கு, ரெம்டெசிவிர்  மருந்து வழங்கப்படவுள்ளது.

கடந்த மே மாதம் முதல் அவசர தேவைகளுக்காக மட்டும் ரெம்டெசிவிர் மருந்தை பயன்படுத்த அமெரிக்காவில் அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

கொரோனா தொற்றுககுள்ளான அமெரிக்க ஜனாதிபதிக்கு  ரெம்ட்சிவிர் மருந்து வழங்கப்பட்டது. அதன்பின் அவர் குணமடைந்தார்.

அமெரிக்கா கொரோனா வைரஸ் தொற்றினால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் முதலிடத்திலுள்ளது.

அங்கு கொரோனாவால் 8,661,722 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு,228,381 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.