லெபனான் பாதுகாப்பு அதிகாரி மேஜர் ஜெனரல் அப்பாஸ் இப்ராஹிம் வெள்ளிக்கிழமை அமெரிக்காவிலிருந்து பெய்ரூட்டிற்கு திரும்பியுள்ளார்.

அமெரிக்காவில் அவர் கொவிட் -19 தெற்றுக்கு உள்ளானதாக‍ கூறப்படுகிறது.

அந் நாட்டு நேரப்படி திங்கள்கிழமை மாலை லெபனானின் பொது பாதுகாப்பு அமைச்சகம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

திங்களன்று அறிவிக்கப்பட்ட இப்ராஹிமின் நேர்மறையான கொரோனா தொற்று சோதனை முடிவு, வொஷிங்டனில் பேச்சுவார்த்தைகளில் இருந்து அவர் நாடு திரும்புவதை தாமதப்படுத்தியது மற்றும் பாரிஸில் திட்டமிடப்பட்ட கூட்டங்களை இரத்து செய்வதற்கும் காரணமாக அமைந்தது.

ஜெனரல் இப்ராஹிம் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டதால் தேவையான தனிமைப்படுத்தப்பட்ட காலம் முடிந்த பின்னர் தனது பணியைத் தொடருவார் என்று அந் நாட்டு ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

எனினும் அவரது தனிமைப்படுத்தல் தன்மை குறித்த எந்த விபரங்களையும் வெளியிடவில்லை.

சிரியாவில் நடைபெற்ற அமெரிக்க குடிமக்கள் குறித்து விவாதிக்க கடந்த வாரம் வெள்ளை மாளிகையில் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ரோபர்ட் ஓ’பிரையனை இப்ராஹிம் சந்தித்ததாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.