20 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை எப்படியாவது அரசு நிறைவேற்றியே தீரும் என பொதுவாக எதிர்பார்க்கப்பட்டது.
அதற்கமைய தற்போது ஆளும் கட்சியின் அனைத்து உறுப்பினர்களின் ஆதரவுடனும் மூன்றில் இரண்டு வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
20 ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பான இறுதி வாக்கெடுப்பில் 156 பேர் ஆதரவாகவும் 65 பேர் எதிராகவும் வாக்களித்தனர்.
20ஆவது திருத்தத்துக்கு ஆதரவாக எதிர்த்தரப்பின் 8 பாராளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்துள்ளனர்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களான நசீர் அஹமத் எச்.எம்.எம் ஹரிஸ், பைசால் காசிம் எஸ்.எம்.தௌபீக் ஆகியோரும் ஐக்கிய மக்கள் சக்தியின் டயானா கமகேயும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் அரவிந்தகுமாரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அலி சப்ரி ரஹீம் மற்றும் இசாக் ரஹூமான் ஆகியோரும் 20ஆவது திருத்தத்தை ஆதரித்து வாக்களித்ததன் காரணமாக ஆளும் கட்சி மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் 20ஆவது திருத்தத்தை நிறைவேற்றியது.
இதற்கு எட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கட்சி தாவல் வழிவகுத்தது.
20 ஆவது திருத்தச் சட்டமூலத்தை மூன்றாம் வகுப்பு நடத்தி நிறைவேற்ற முன்னர் சட்டமூலத்தில் திருத்தங்களை மேற்கொள்ள ஆளுங்கட்சி சார்பில் 60 திருத்தங்களும் எதிர்க்கட்சியின் சார்பில் 57 திருத்தங்கள் முன்வைக்கப்பட்டன.
எனினும் எதிர்க்கட்சியின் பெரும்பான்மையான திருத்தங்களை அரசாங்கம் நிராகரித்து விட்டது. இதனிடையே 20 ஆவது திருத்தம் மிகவும் மோசமானது என விஜயதாச ராஜபக்ஷவும் விதுர விக்ரமரத்னவும் கடுமையாக விமர்சித்து வந்த நிலையில் நேற்று வாக்கெடுப்பில் அவர்கள் 20ஆவது திருத்தத்துக்கு ஆதரவாக வாக்களித்தனர்.
இதேவேளை, மக்களின் தேவைக்காக நாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் 20 ஆவது திருத்தத்தை கொண்டுவந்து இருந்தால், அதற்கு நாங்கள் ஆதரவாக வாக்களித்து இருப்போம்.
மாறாக 19ஆவது திருத்தம், ஜனநாயக அம்சங்களை இல்லாமலாக்கி விட்டு தனி நபர் ஒருவரிடம் அதிகாரங்களை குவிப்பதை கொண்டே கொண்டுவரப்பட்டுள்ளது. இது ஜனநாயகத்துக்கு விழும் சாவுமணி என்றும் கூறியுள்ளார்.
பாராளுமன்றில் நேற்று இடம்பெற்ற அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தம் மீதான இரண்டாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு பேசுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
பாராளுமன்றில் நேற்று இடம்பெற்ற அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தம் மீதான எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
அதிகாரங்கள் ஓரிடத்தில் குவிவதன் மூலம் அங்கு சர்வாதிகாரப் போக்கே இடம்பெறும். அவ்வாறான நிலையே தற்போது அரசியல் அமைப்பு திருத்தம் மூலம் இடம்பெற்றுள்ளது.
ஆணைக் குழுக்கள் அனைத்தும் இல்லாமல் ஆக்கப்படுகின்றன. இதனால் அரச துறைகளில் சுயாதீனத்தை எதிர்பார்க்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.
20ஆவது திருத்தத்தை தொடர்ந்து ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷ நிறைவேற்று ஜனாதிபதியின் முழுமையான அதிகாரத்தையும் பெற்று விளங்குவார்.
இந்த கட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி காலஞ்சென்ற ஜே.ஆர் ஜயவர்த்தனவைத்தான் நினைக்கத் தோன்றுகின்றது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM