இன்று மூடப்பட்ட பேருவளை மீன்பிடித் துறைமுகத்தில் 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகபேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

பேருவளை மீன்பிடித் துறைமுகம் இன்று வெள்ளிக்கிழமை தற்காலிகமாக மூடப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது.

அதன் பிறகு அங்கு 20 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையின் பின் அவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் கொரோனா தொற்று ஏற்பட்டவர்களிடம் நெருங்கிய தொடர்புகளை பேணிய நபர்களை தனிமைப்படுத்தவற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.