மாலபே சயிட்டம் தனியார் வைத்திய கல்லூரியை அரச மற்றும் தனியார் ஒன்றிணைந்த நிறுவனமாக ஓர் சபையின் கீழ் செயற்படுத்துவதற்கு தீர்மானித்துள்ளனர்.

அரச பல்கலைக்கழக வைத்திய பீடங்களின் பீடாதிபதிகள் மற்றும் உயர் கல்வி அமைச்சர் லக்ஷமன் கிரியெல்ல போன்றவர்களுக்கு இடையில் நேற்றைய தினம் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பீடாதிபதிகள் நேற்றைய தினம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடனும் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்போதே குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. 

இதேவேளை, சயிட்டம் கல்லூரியின் நிர்வாக செயற்பாடுகள் அரச விதிமுறைகளின்படி முன்னெடுக்கப்படவுள்ளதாக உயர் கல்வி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.