கொஸ்கமவில் அமைந்துள்ள கொவிட்-19 சிகிச்சை நிலையத்திலிருந்து ஒரு கொரோனா நோயாளி தப்பிச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

26 வயதுடை ஆண் ஒருவரே இவ்வாறு சிகிச்சை நிலையத்திலிருந்து சிகிச்சை பெற்று வந்தபோது தப்பிச் சென்றுள்ளதாக கொவிட்-19 தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.

இன்று அதிகாலை 06.00 மணியளவில் நோயாளி சிகிச்சை நிலையத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த நபர் தொடர்பில்  தகவல் அறிந்தால்  அருகில்  உள்ள  பொலிஸ் நிலையத்திலோ அல்லது 1199  என்ற  இலக்கத்தின் ஊடாகவோ தொடர்புகொண்டு  அறியத்தருமாறு  பொலிஸார்  கேட்டுக்கொண்டுள்ளனர்.