ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் வசிக்கும் நபர்களுக்கு தபால் மூலம் மருந்துகளை விநியோகிக்க நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக சுகாதார சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எனினும் குறித்த பகுதிகளில் மருந்துக் கடைகளை நடத்தி செல்பவர்களுக்கு இத் திட்டத்தை செயல்படுத்த தேவையான வழிமுறைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு நாட்டில் தற்போது கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.