பேருவளை மீன்பிடித் துறைமுகம் இன்று வெள்ளிக்கிழமை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

குறித்த துறைமுக பகுதியைச் சேர்ந்த பலர் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களாக அடையாளம் காணப்பட்டனர்.

இன்றைய தினம் பேருவளை மீன்பிடித் துறைமுகம் மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.