விடை பெற்றார் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர்

Published By: Digital Desk 3

23 Oct, 2020 | 09:47 AM
image

திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபராக கடமையாற்றிய ஜே.எஸ்.டி.எம்.அசங்க அபேவர்தன நேற்று (22.10.2020)  30 வருட அரச சேவையின் பின்னர் ஓய்வு பெற்றார்.

இதனை முன்னிட்டு மாவட்ட செயலகத்தில் பிரியாவிடை வைபவம் ஏற்பாடு செய்யப்பட்டது.பெப்ரவரி 14ஆம் திகதி முதல் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்ட இவர் குறுகிய காலத்தில் மாவட்ட மக்களுக்கு இன , மத, மொழி வேறுபாட்டின்றி அளப்பறிய சேவையை வழங்கியுள்ளார்.

ஜே.எஸ்.டி.எம்.அசங்க அபேவர்தன

மாவட்டத்தின் பல பிரதேசங்களுக்கு நேரடியாக கள விஜயம் மேற்கொண்டு மக்களது உரிய பிரச்சினைகளை கேட்டறிந்து அவற்றை தீர்த்து வைப்பதிலும் அதேபோன்று உரிய திணைக்களங்களை தொடர்பு கொண்டு ஒருங்கிணைத்தும் செயற்படுவதில் வல்லவராக இவர் காணப்பட்டமை விசேட அம்சமாகும்.

1991 ஆம் ஆண்டு ஏப்ரல் 19 ஆம் திகதி இலங்கை நிர்வாக சேவைக்குள் இணைந்த இவர் லாஹுகல,தெஹியத்தகண்டிய உதவி பிரதேச செயலாளராகவும் லாஹுகல பிரதேச செயலாளராகவும்,அம்பாறை மாவட்ட உதவி அரசாங்க அதிபர் மற்றும் மேலதிக அரசாங்க அதிபராகவும் கடமையாற்றினார்.

பின்னர் கடற்றொழில் மற்றுமர நீரியல் வழங்கல் அமைச்சின் மேலதிக செயலாளராகவும் கிழக்கு மாகாண கல்வியமைச்சு மற்றும் கிழக்கு மாகாண ஆளுநரின் செயலாளராகவும் அரசாங்க அதிபராக பதவியேற்க முன்னர் சேவையாற்றுயமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53