கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில்  எதிர்வரும் 24 ஆம் மற்றும் 25 ஆம் திகதிகளில் நடத்தப்படவிருந்த  தேசிய குழாமுக்கு தெரிவுக்கான தகுதிகாண் போட்டிகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக இலங்கை  மெய்வல்லுநர் சங்கம் தெரிவித்துள்ளது.

நாட்டில் பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்திய கொரோனா வைரஸின் தாக்கம் காரணமாக சுகததாச விளைாட்டரங்கு அமைந்துள்ள கொழும்பு -13 புளூமெண்டல் பகுதியில் குறித்த தினங்களில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு பிறப்பிக்கப்ட்டுள்ளதால் தகுதிகாண் போட்டிகள் நடத்த முடியாது போயுள்ளதாக இலங்கை மெய்வல்லுநர் சங்கம் ம‍ேலும் தெரிவித்துள்ளது.