(நா.தனுஜா)

கொவிட் - 19 வைரஸ் பரவலைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளில் ஒன்றாக, இன்றுமுதல் எதிர்வரும் 29 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் கொழும்பு மாவட்டத்தில் வாகன வருவாய் அனுமதிப்பத்திரம் விநியோகிப்பதைத் தற்காலிகமாக இடைநிறுத்தியிருப்பதாக மேல் மாகாணத்தின் பிரதான செயலாளர் அலுவலகம் அறிவித்திருக்கிறது. 

வாகன வருமான உத்தரவு பத்திர விநியோகம் இடைநிறுத்தம் | Virakesari.lk

அதன்படி கொழும்பு மாவட்டத்தில் வாகன வருவாய் அனுமதிப்பத்திரத்தை விநியோகிப்பது 22 - 29 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருக்கிறது. இக்காலப்பகுதிக்குள் காலவதியாகும் வாகன வருவாய் அனுமதிப்பத்திரங்களுக்கு எதிர்வரும் நவம்பர் மாதம் 15 ஆம் திகதி வரையில் தண்டப்பணம் அறவிடப்படமாட்டாது என்றும் மேல்மாகாண பிரதான செயலாளர் அலுவலகம் அறிவித்திருக்கிறது