20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலம் பாராளுமன்றில் இன்று சட்டமாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

நீதியமைச்சரினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட 20 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் மீதான விவாதம் இருதினங்களாக இடம்பெற்று வந்த நிலையில் இன்று வாக்கெடுப்புக்கு விடப்பட்டது.

இந்நிலையில், 20 ஆவது திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக 156 வாக்குகளும் எதிராக 65 வாக்குகளும் அளிக்கப்பட்டது.

 இதனையடுத்து நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை பலப்படுத்தும் விதமாக அரசாங்கம் கொண்டுவந்த 20 ஆம் திருத்த சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு, திருத்தங்களுடன் மூன்றில் இரண்டு பெரும்பான்மை அங்கீகாரத்தை பெற்று நிறைவேற்றப்பட்டது. 

இவ் வாக்கெடுப்பில் மூன்று பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொள்ளவில்லை.

இதேநேரம் எதிர்க்கட்சியிலிருந்து 20 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்திற்கு ஆதரவாக வாக்களித்த பாராளுமன்ற உறுப்பினர்கள் விபரம் பின்வருமாறு:

1. ஐ.ம.ச. தேசிய பட்டியல் உறுப்பினர் - டயானா கமகே 

2. ஸ்ரீ.மு.கா. உறுப்பினர் நஸீர் அஹமட் 

3. முஸ்லிம் தேசிய கூட்டணி உறுப்பினர் ஏ.ஏ.எஸ்.எம்.ரஹீம் 

4. ஸ்ரீ.மு.கா. உறுப்பினர்  பைசல் காசிம் 

5. ஸ்ரீ.மு.கா. உறுப்பினர் எச்.எம்.எம்.ஹாரீஸ் 

6. ஸ்ரீ.மு.கா. உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் 

7. ஐ.ம.ச. உறுப்பினர் அரவிந்த் குமார் 

8. ஐ.ம.ச. உறுப்பினர் இஷாக் ரஹ்மான்