நாட்டின் தென்மேற்கு பகுதி மற்றும் மலைப் பிரதேசங்களில் இன்று பலத்த காற்று வீசக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

புத்தளத்திலிருந்து கொழும்பு, காலி மற்றும் மாத்தறையின் ஊடாக பொதுவில் கடற் பிரதேசங்களில் காற்றின் வேகம் மணிக்கு 60 மற்றும் 70 கிலோ மீற்றர் வரை வீசக்கூடுமென தெரிவித்துள்ளது.

இதேவேளை, குறித்த கடற் பிரதேசங்களில் அவ்வப்போது பலத்த காற்று வீசுமெனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.