பேலியகொட மீன் சந்தையில் கொரோன தொற்றுக்குள்ளானவர்களுடன் தொடர்புகளை பேணிய 800 க்கும் மேற்பட்ட நபர்கள் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

அது மாத்திரமன்றி சுமார் 1,800 நபர்களை சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கொவிட்-19 தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையத்தில் இடம்பெற்ற ஊடகவியலார் சந்திப்பின்போது இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.