எல்பிட்டிய பகுதியில் இடம்பெற்ற இளைஞன் ஒருவரின்  கொலை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர் 25 வயது மதிக்கத்தக்கவர் என அடையாளங்காணப்பட்ட நிலையில் பொலிஸார் சந்தேக நபரை கைது செய்வதற்கான விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர். 

இந்நிலையில் தலைமறைவாகியிருந்த சந்தேக நபர் நேற்று புதன்கிழமை அனுருத்தகம - கரந்தெணிய பகுதியில் வைத்து எல்பிட்டிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

சந்தேக நபர் அதே பகுதியைச் சேர்ந்தவரென விசாரணைகளில் தெரியவந்துள்ளது. எல்பிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அனுருத்தகம - கரந்தெணிய பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு கூரிய ஆயுதத்தால் தாக்கி 22 வயதான இசுறு சம்பத் எனும் இளைஞன் ஒருவரே இவ்வாறு  கொலை  செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.