பேலியகொட மீன் சந்தைக்கு  சென்றவர்களை பரிசோதித்த போது சுமார் 60 பேர்க்கு கொரோனா தொற்றுதல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

எனவே கிண்ணியாவிலிருந்து இங்கு பயணம் செய்த  வாகன சாரதிகள், சம்மந்தப்பட்ட நபர்கள்  உடனடியாக இருப்பின் தங்கள்  தகவல்களை   கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு அல்லது தங்கள் பகுதி பொதுச் சுகாதார பரிசோதகர்களிடம் அறிவித்து பதிவு செய்யுமாறு கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஏ.எம்.எம்.அஜீத் தெரிவித்துள்ளார். 

மேலதிக பரிசோதனைகளை மேற் கொள்ளவுள்ளோம் . உங்களின் குடும்ப உறுப்பினர்களையும், ஊர் மக்களையும் பாதுகாக்க பங்களிப்பு செய்யவும்.கொவிட்19 தொற்றில் இருந்து பாதுகாப்பு பெறவும் இவ்வாறான ஒத்துழைப்புக்களை வழங்குமாறும் சுகாதார வைத்திய அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.