வங்காள விரிகுடாவை அண்மித்த கடற்பிராந்தியத்தில்  நாளை வரை கடற்தொழிலில் ஈடுப்பட வேண்டாம் என நீண்ட நாட்கள் மீன் பிடிப்போருக்கு அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வட மத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், திருகோணமலை, மட்டக்களப்பு, மன்னார் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும், மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும் 50 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டல திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இதேவேளை, மேற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் பல இடங்களிலும் மற்றும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழை பெய்யும்  என வளிமண்டல திணைக்களம் தெரிவித்துள்ளது.