கொவிட் 19 தாக்கங்கள் காரணமாக பதுளைக்கு வந்த வெளிநாடுகளைச் சேர்ந்த 25 பேர், மீண்டும் தத்தமது நாடுகளுக்கு செல்லமுடியாமல்,பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கிய வண்ணமுள்ளனர்.

மீளவும் தத்தமது நாடுகளுக்கு செல்லமுடியாமல், பதுளைப் பகுதியின் எல்ல சுற்றுலா பிரதேச  ஹோட்டல்களில் தங்கியுள்ளனர். அவர்களிடமிருந்த பணமும் செலவாகியதினால், பெரும் பிரச்சினைகள் மத்தியில் வாழ்ந்து வருகின்றனர். அவர்களிடம் அன்றாட செலவுகளுக்கும் பணம் இல்லாதுள்ளன. 

குறிப்பிட்ட வெளிநாட்டாரிடம் பணம் இல்லாததால், அவர்கள் தங்கியிருந்த ஹோட்டல்களிலிருந்து வெளியேற்றப்பட்டு, அவ் ஹோட்டல்களும் மூடப்பட்டுள்ளன. செய்வதறியாமல் நடுத்தெருவில் இருந்துவரும் இவ்வெளிநாட்டு உல்லாசபிரயாணிகளை, எல்லப்பகுதியில் “சீல்”விடுதியிலும்,பிறிதொரு விடுதியிலும் தங்கவைக்கப்பட்டு, மூன்றுவேளை உணவு வகைகள்,தங்குமிடங்கள் ஆகியனவற்றை,மனிதாபிமானத்துடன் இலவசமாக வழங்கப்பட்டுவருகின்றன. இவ்விடயம் அனைவரையும் கவரக் கூடியதாகவுள்ளன.

இந்நிலையில்,எல்ல உல்லாசபகுதியில் பெரும்பாலான விடுதிகள்,ஹோட்டல்கள்,தற்போது மூடப்பட்டிருப்பதால், நான்காயிரத்திற்கு மேற்பட்ட ஊழியர்களுக்கு தொழில்களை இழக்க வேண்டிஏற்பட்டுள்ளது. ஆகையினால், அவரவர்களின் வாழ்வாதாரங்களும் கேள்விக்குறியாகவே இருந்துவருகின்றன.

இப்பகுதிகளுக்கு உல்லாசபிரயாணிகளும் சமூகமளிக்காமையினால், கலகலப்பாக இருந்த இப்பகுதியில், பெரும் மயான அமைதியே தற்போது காணப்படுகின்றன.