இம் மாதம் 19 ஆம் திகதி முதல் கிழக்குக் கடலில் மூன்று நாட்களுக்கு மேல் நடைபெற்ற இலங்கை கடற்படைக்கும் இந்திய கடற்படைக்கும் இடையிலான வருடாந்திர இருதரப்பு கடற்படை கூட்டுப்பயிற்சி - SLINEX 2020 நேற்றைய தினம் வெற்றிகரமாக நிறைவடைந்தது.

எட்டாவது முறையாக நடைத்தப்பட்ட இந்த இருதரப்பு கடற்படை பயிற்சியின் இலங்கை கடற்படையை பிரதிநிதித்து இலங்கை கடற்படை கப்பல் கஜபாஹு மற்றும் 'சயுர' ஆழ்கடல் கண்காணிப்புக் கப்பல்கள் பங்கேற்றதுடன் இந்திய கடற்படையை பிரதிநிதித்து ஐ.என்.எஸ் கமோர்டா மற்றும் ஐ.என்.எஸ் கில்டான் கப்பல்கள் ஹெலிகாப்டர்களுடன் பங்கேற்றன.

இரு நாடுகளின் கடற்படைகளுக்கிடையேயான தொடர்புகளை மேம்படுத்துதல் மற்றும் கூட்டு கடற்படை நடவடிக்கை பயிற்சிகள் மூலம் அனுபவங்களை பரிமாறிக்கொள்ளும் நோக்கில் நடத்தப்பட்ட இந்த கூட்டு கடற்படை பயிற்சியின் போது 'கில்டான்' மற்றும் 'கஜபாஹு' கப்பல்கள் இடையே ஹெலிகாப்டர் தரையிறங்கும் பயிற்சிகள், கப்பல் வழிசெலுத்தல் பயிற்சிகள், ஆயுதங்களைக் கையாளுதல் மற்றும் படப்பிடிப்பு பயிற்சிகள், தேடல் மற்றும் மீட்பு பயிற்சிகள் வெற்றிகரமாக நடத்தப்பட்டன.

மேலும், கொவிட் -19 பரவுவதைத் தடுக்க வழங்கப்பட்ட சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி இரு தரப்பிலும் நடற்படையினர்களுக்கிடையேயான தூரத்தை பராமரித்து இந்த கடற்படைப் பயிற்சி மேற்கொள்ளப்பட்டது.

மேலும் இதுபோன்ற பயிற்சிகள் மூலம் இரு தரப்பினருக்கும் இடையிலான பரஸ்பர புரிந்துணர்வை மேம்படுத்தப்படுகின்றதுடன் அவர்களின் சொந்த திறன்கள் மற்றும் கடற்படை நடவடிக்கைகளில் வரம்புகள், அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள ஒரு சிறந்த வாய்ப்பாகவும் இருக்கும்.