ஐந்து வருடங்களுக்கு அரசை அசைக்கமுடியாது : பிரதமர்

Published By: Robert

22 Jul, 2016 | 09:20 AM
image

தேசிய அர­சாங்கம் அடுத்த வரவு – செலவுத் திட்­டத்­துடன் கவிழ்ந்­து­விடும் என சிலர் கனவு காண்­கின்­றனர். இக் கனவு ஒரு போதும் பலிக்காது. இந்த அர­சாங்­கத்தின் ஆட்சி ஐந்து வரு­டங்கள் தொடரும் என நேற்று சபையில் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரிவித்தார்.

இந்­தியா, சீனா, சிங்­கப்பூர், ஜப்பான், ஆகிய நாடுகளு டனும் ஐரோப்­பிய ஒன்­றியத்துடனும் எதிர்­கா­லத்தில் இரு­த­ரப்பு வர்த்­தக உடன்­ப­டிக்­கைகள் கைச்­சாத்­தி­டப்­ப­ட­வுள்­ள­தா­கவும் பிரதமர் அறிவித்தார்.

சிங்­கப்­பூ­ருக்கான உத்­தி­யோ­க­பூர்வ விஜயம் தொடர்பில் நேற்று பாரா­ளு­மன்­றத்தில் தெளி­வு­ப­டுத்­தி விசேட உரை நிகழ்த்­திய பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க இவ்­வாறு தெரி­வித்தார்.

பிர­தமர் சபையில் தொடர்ந்து உரை­யாற்­று­கையில், கடந்த 17, 18 ஆம் திக­தி­களில் சிங்­கப்பூர் பிர­த­மரின் உத்­தி­யோ

க­பூர்வ அழைப்­பிற்­கேற்ப அங்கு விஜயத்தை மேற்கொண் டேன். எனது விஜ­யத்தில் அமைச்­சர்­க­ளான மங்­கள சம­ர­வீர,

மலிக்சமர­விக்­ரம,பிர­தி­ய­மைச்சர் மித்­ர­பால ஆகி­யோரும் கலந்­து­கொண்­டனர்.

இதன்­போது தெற்­கா­சிய புலம்­பெயர் நாட்டின் ஆரம்ப கூட்­டத்தில் பிர­தான சொற்­பொ­ழிவை நான் நிகழ்த்தினார்.

இலங்­கையில் பொரு­ளா­தார அபி­வி­ருத்­திக்­காக புதிய அரசு முன்­னெ­டுக்கும் திட்­டங்கள் தொடர்பில் தெளி­வு­ப­டுத்­தினேன்.

அத்­தோடு இலங்­கையை பண்­ட­மாற்று, வர்த்­தக மற்றும் நிதி மத்­திய நிலை­ய­மாக மாற்­று­வ­தற்­காக அரசு முன்­னெ­டுக்கும் திட்­டங்­க­ள் குறித்தும் கடல், வான், நெடுஞ்­சா­லைகள், எரி­சக்தி மற்றும் தகவல் தொழில்­நுட்­பத்­திற்கு தேவை­யான வச­தி­களை அபி­வி­ருத்தி செய்­வ­தற்­கான எமது பெள­தீக அடிப்­படை வச­தி­களை மேம்­ப­டுத்­து­தல்கள் தொடர்பிலும் தெளி­வு­ப­டுத்­தல்கள் வழங்­கப்­பட்­டன.

அத்­தோடு எம்மால் ஆரம்­பிக்­கப்­பட்ட புதிய அபி­வி­ருத்தி வேலைத்­திட்டம் போன்று பத்து இலட்சம் தொழில் வாய்ப்புத் திட்டம் மற்றும் பல­முள்ள மத்­திய தர வர்க்­கத்­தி­னரை உரு­வாக்கும் திட்­டங்கள் தொடர்­பிலும் சிங்­கப்­பூரில் தெளிவு படுத்­தல்கள் மேற்­கொள்­ளப்­பட்­டன.

அது மட்­டு­மல்­லாது கண்­டி–­கொ­ழும்பு – அம்­பாந்­தோட்டை பொரு­ளா­தார வல­யங்­களை அபி­வி­ருத்தி செய்யும் வேலைத்­திட்­டங்கள் தொடர்­பிலும், கண்டி நகர அபி­வி­ருத்தி திட்டம், வடமேல் வலய கைத்­தொழில் மற்றும் உல்­லாசப் பிர­யா­ணத்­துறை வேலைத்­திட்­ட பொலிஸ் மேல்­மா­காண அபி­வி­ருத்தித் திட்டம், காலியை மையப்­ப­டுத்­திய தென் பகுதி உல்­லாசப் பிர­யா­ணத்­துறை அபி­வி­ருத்தி வேலைத்­திட்டம் அம்­பாந்­தோட்டை புதிய பொரு­ளா­தார வலய வேலைத்­திட்டம் போன்ற திட்­டங்கள் தொடர்­பா­கவும் தெளி­வு­ப­டுத்­தல்கள் மேற்­கொள்­ளப்­பட்­டன.

மேல்­மா­காண அபி­வி­ருத்­தித்­திட்­டத்­திற்கு மட்டும் 40 பில்­லியன் அமெ­ரிக்க டொலர் தேவைப்­ப­டு­கி­றது.

அம்­பாந்­தோட்டை பொரு­ளா­தார வலய அபி­வி­ருத்­திக்கு 10 பில்­லியன் அமெ­ரிக்கன் டொலர் தேவைப்­ப­டு­கி­றது.

இவை தொடர்­பி­லான முத­லீ­டுகள் தொடர்­பாக தெளி­வுப்­ப­டுத்­தல்கள் முன்­னெ­டுக்­கப்­பட்­டன.

இவ்­வே­லைத்­திட்டம் எமது வல­யத்தில் பாரிய பொரு­ளா­தார அபி­வி­ருத்தித் திட்­ட­மாகும். இது மும்பை டெல்லி பொரு­ளா­தார வல­யத்­திற்கு இணை­யா­ன­தாகும்.

இதன் மூலம் இந்து சமுத்­தி­ரத்தில் பாரிய பொரு­ளா­தார மத்­திய நிலை­ய­மாக நாம் உயர்­வ­தோடு தென் இந்­திய பொரு­ளா­தா­ரத்­திற்கும் எம்மால் அழுத்தம் கொடுக்கக் கூடிய நிலைய ஏற்­படும்.

சிங்­கப்பூர் ஜனா­தி­பதி, பிர­தமர் ஆகி­யோ­ரையும் சந்தித்தேன்்.

சிங்­கப்பூர் ஜனா­தி­ப­தி­யு­ட­னான சந்­திப்பில் அந்­நாட்டு வெளி­வி­வ­கார அமைச்சர் விவியன் பால­கி­ருஷ்ணன் மற்றும் வர்த்­தக அமைச்சர் ஈஸ்­வரன் ஆகி­யோரும் கலந்­து­கொண்­டனர்.

சிங்­கப்பூர் பிர­த­ம­ரு­ட­னான சந்­திப்பின் போது ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் வெற்றி தொடர்­பா­கவும் தேசிய அரசு அமைக்­கப்­பட்­டது தொடர்­பிலும் தனது மகிழ்ச்­சியை தெரி­வித்தார்.

அத்துடன் இலங்­கையின் பொரு­ளா­தார அபி­வி­ருத்­திக்கு அனைத்து உத­வி­க­ளையும் வழங்­கு­வ­தாக உறு­தி­ய­ளித்தார். இதன்­போது சிங்­கப்­பூ­ருடன் கையெ­ழுத்­தி­டப்­ப­ட­வுள்ள சுதந்­திர வர்த்­தக உடன்­ப­டிக்கை மற்றும் இந்­தியா சீனா­வுடன் கையெ­ழுத்­தி­டப்­ப­ட­வுள்ள இரு­த­ரப்பு உடன்­ப­டிக்­கைகள் தொடர்­பா­கவும் கலந்­து­ரை­யா­டப்­பட்­டது.

13 ஆவது வயதில் கட்­டிடக் கல்­வி­யு­ட­னான தொழிற் பயிற்­சிக்கு சந்­தர்ப்பம் வழங்கி இளைஞர் யுவ­தி­க­ளுக்கு தொழில்­வாய்ப்­புக்கள் ஏற்­ப­டுத்தும் திட்டம் தொடர்­பா­கவும் என்னால் தெளி­வு­ப­டுத்­தப்­பட்­டது.

இலங்­கையின் அரச சேவையின் செயற்றிறனை உயர்த்­து­வ­தற்கு சிங்­கப்­பூரின் ஒத்­து­ழைப்பை இதன்­போது கோரினேன். அதற்கு சிங்­கப்பூர் பிர­தமர் தனது ஆத­ரவை வழங்க உறு­தி­ய­ளித்தார்.

இவ் வருடம் நவம்பர் மாதம் இலங்­கையில் இடம்­பெ­ற­வுள்ள தெற்கு மற்றும் தென்­கி­ழக்கு ஆசிய நாடு­களின் பல­வித சமூ­கங்­களின் மதம் சார்ந்த பொறுப்­புக்கள் தொடர்­பான சர்­வ­தேச மாநாடு தொடர்­பா­கவும் நான் அறி­வித்­த­தோடு அதற்­காக ஒத்­து­ழைப்பு வழங்­கு­மாறு கோரிக்கை விடுத்தேன். இதனை சிங்­கப்பூர் பிர­தமர் ஏற்றுக் கொண்டார். அத்­தோடு சிங்­கப்பூர் பிர­த­ம­ருக்கு இலங்­கைக்கு விஜயம் செய்­யு­மாறு அழைப்பு விடுத்தோம்.

அத­னையும் அவர் ஏற்றுக் கொண்டார். இவ் விஜ­யத்தின் போது இலங்கை சிங்­கப்­பூ­ருக்கு இடை­யே­யான கலா­சார பரி­மாற்ற வேலைத் திட்­டங்கள், மெகா பொலிஸ் திட்டம், சிங்­கப்பூர் சிவில் சேவை, தொழிற் கல்வி அபி­வி­ருத்தி உள்ளிட்ட உடன்­ப­டிக்­கை­களும் கையெ­ழுத்­தி­டப்­பட்­டன.

சிங்­கப்பூர் சிவில் சேவைகள் கல்­லூ­ரியை பார்­வை­யிட்டோம். அத்­தோடு சிங்­கப்பூர் வர்த்­தக சமூ­கத்தை சந்­தித்து கலந்­து­ரை­யா­டினோம்.

சிங்­கப்பூர் அமைச்சர் உய­ர­தி­கா­ரிகள் முத­லீட்­டா­ளர்கள் வர்த்­த­கர்­க­ளையும் சந்­தித்து பேச்­சு­வார்த்­தை­களை நடத்­தி­ய­தோடு பல சிங்­கப்பூர் முத­லீட்­டா­ளர்கள் தமது முத­லீ­டு­களை ஆரம்­பித்­துள்­ளனர்.

சிங்­கப்பூர் முத­லீட்­டா­ளர்­க­ளுக்கு வச­தி­களை ஏற்­ப­டுத்தும் விதத்தில் விசேட பிரிவையும் ஏற்­ப­டுத்­தவும் இணக்கம் தெரி­விக்­கப்­பட்­டது.

அத்துடன் சிங்­கப்பூர் துறை­மு­கத்­திற்கு விஜயம் செய்து அதில் மேற்­கொள்­ளப்­பட்­டுள்ள நவீன அபி­வி­ருத்­தி­க­ளையும் பார்­வை­யிட்டோம்.

இலங்­கை­யிலும் துறை­முக அபி­வி­ருத்­திக்கு உதவி வழங்க இதன் போது இணக்கம் தெரி­விக்­கப்­பட்­டது.

எதிர்­வரும் நாட்­களில் வர்த்­தகம் மற்றும் முத­லீ­டுகள் தொடர்­பாக பேச்­சு­வார்த்­தை­களை நடத்­து­வ­தற்­காக சீனா­வுக்கு விஜ­யத்தை மேற்­கொள்­ள­வுள்ளேன்.

அதே­போன்று ஜப்­பா­னுடன் வர்த்­தக ஒத்­து­ழைப்பு மற்றும் முத­லீட்டு ஊக்­கு­விப்பு தொடர்­பா­கவும் பேச்­சு­வார்த்­தை­களை நடாத்­து­வ­தற்­காக ஜப்­பா­னுக்கும் விஜயம் செய்­ய­வுள்ளேன்.

ஜனா­தி­பதி மற்றும் அமைச்சர் மலிக் சம­ர­விக்­ரம ஆகியோர் அண்­மையில் இந்­தி­யா­வுக்கு விஜயம் செய்து வர்த்­தக மற்றும் பொரு­ளா­தார ஒத்­து­ழைப்பு தொடர்பில் பேச்­சு­வார்த்­தை­களை நடத்­தி­னார்கள்.

அக்­டோபர் மாத ஆரம்­பத்தில் புது டில்­லியில் நடை­பெ­ற­வுள்ள உலக பொரு­ளா­தார மாநட்டின் போது இந்­தியப் பிர­தமர் மற்றும் ஏனைய அமைச்­சர்­க­ளுடன் பேச்­சு­வார்த்­தை­களை நடத்த எதிர்­பார்த்­துள்ளோம்.

ஜீ.எஸ்.பி. வரிச் சலு­கையை பெற்றுக் கொள்­வ­தற்­கான விண்­ணப்­பத்தை ஐரோப்­பிய ஒன்­றி­யத்­திடம் கைய­ளித்­துள்ளோம்.

எமது நாட்டின் எதிர்­கால சந்­த­தி­யினர் இளைஞர் யுவ­தி­க­ளுக்கு தொழில்­வாய்ப்­பு­களை பெற்றுக் கொடுக்கும் நோக்­கி­லேயே நாம் அனைத்­தையும் முன்­னெ­டுக்­கின்றோம். இதன் மூலம் மகிழ்ச்­சி­யுடன் வாழும் சமூ­கத்தை உரு­வாக்­கு­வதே எமது இலக்­காகும்.

பத்து இலட்சம் வேலை­வாய்ப்­பு­களை வழங்­கு­வ­தாக நாம் உறுதி மொழி வழங்­கினோம். அதனை நிறை­வேற்­று­வ­தற்­கா­கவே அனைத்­தையும் முன்­னெ­டுக்­கின்றோம்.

சீனா, சிங்­கபூர் , ஜப்பான் , ஐரோப்­பிய ஒன்­றியம் மற்றும் இந்­தியா போன்ற நாடு­க­ளுடன் வர்த்­தக மற்றும் பொரு­ளா­தார ஒத்­து­ழைப்பு உடன்­ப­டிக்­கைகள் கைச்­சாத்­தி­டப்­ப­ட­வுள்­ளன.

எமது நாட்­ட­வர்­க­ளுக்கு வேலை­வாய்ப்­பு­களை ஆற்­றுப்­ப­டுத்திக் கொடுக்கும் நோக்­கி­லேயே இவற்றை முன்­னெ­டுக்­கிறோம்.

அதை­வி­டுத்து வெளி­நாட்­ட­வர்­க­ளுக்கு இலங்­கையில் வேலை­வாய்ப்­புக்­களை வழங்­கு­தற்­காக அல்ல அர­சியல், வர்த்­தக இரண்டு பிரி­வு­க­ளையும் இணைத்து தொழிற் சமிக்­ஞையை ஏற்­ப­டுத்தி முத­லீ­டு­களை அதி­க­ரிக்­கவே நாம் முயற்­சிக்­கின்றோம்.

தற்­போது அம்­பாந்­தோட்­டையில் சீன முதலீட்டாளர்கள் தமது முதலீடுகளை ஆரம்பித்துள்ளனர். இலங்கையின் தேசிய அரசாங்கத்திற்கு உலகத்தில் வரவேற்பு கிடைத்துள்ளது. வாழ்த்துக்கள் கிடைத்துள்ளன. தேசிய அரசு சித்தாந்தத்தின் ஊடாக எதிர்வரும் 5 வருடத்திற்குள் எமது பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுக் கொள்வதற்கு நாம் எதிர்பார்த்துள்ளோம்.

எதிர்வரும் காலங்களில் இந்தத் திட்ட முறைமையை மேலும் பலப்படுத்தி முன்னோக்கி கொண்டு செல்வோம்.

இக்காலம் முழுவதும் எமது தேசிய அரசாங்கமே ஆட்சியிலிருக்கும்.

இது தொடர்பில் எந்தச் சந்தேகமும் கிடையாது. எந்த விதமான விமர்சனங்களும் குற்றச்சாட்டுக்களும் முன்வைக்கப்பட்டாலும் ஜனாதிபதியினதும் எனதும் எதிர்பார்ப்பு நாட்டின் எதிர்கால சந்ததியினருக்கு ஒளிமயமான எதிர்காலத்தை ஏற்படுத்திக் கொடுப்பதே ஆகும்.

2015 ஜனவரி 08 ஆம் திகதி நாட்டு மக்கள் எம்மீது வைத்த நம்பிக்கையை அதே போன்று எந்த விதமான மாற்றமும் இன்றி பாதுகாப்போம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59