மிக சிறந்தக் கதை என அனைவராலும் பாராட்டப்படும் 'அஞ்சல' வருகின்ற 24ஆம் திகதி திரைக்கு வர உள்ளது. 

புதிய இயக்குனர் தங்கம் சரவணன் இயக்கத்தில், பிரபல இசை அமைப்பாளர் கோபி சுந்தர் இசை அமைக்க, விமல் ஜோடியாக நந்திதா நடிக்கும் இப்படத்தில் முக்கியக் கதா பாத்திரத்தில் நடித்து உள்ளார் பசுபதி. 

அரசாங்கம் சாலையை விஸ்தரிக்க முயலும் போது, அதனால் பாதிக்கப்படும் ஒரு பரம்பரை சொத்தான டீ கடையைக் காப்பாற்ற முயலும் ஒரு கவிதைதான் 'அஞ்சல' . ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்ற விவாதம் பரவலாக இருக்கும்போது, சரியான நேரத்தில் சரியான படமாக வருகிறது 'அஞ்சல'. இரசிகர்களின் இரசனைக்கேற்ப ருசியான படமாக இருக்கும் 'அஞ்சல '.

தகவல் : சென்னை அலுவலகம்