கேகாலை மாவட்டத்தில் 23 பேர் கொரோனா தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளதாக கேகாலை மாவட்ட சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் குமார விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

கேகாலை வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவின் மூன்று வைத்தியர்களுக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,

´கேகாலை வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவின் மூன்று வைத்தியர்களுக்கு கடந்த தினம் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. அதில் ஒரு வைத்தியரின் கணவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

மேலும், அவரின் மகனுக்கும் தொற்று ஏற்பட்டிருந்தது. குறித்த வைத்தியரின் மகளுக்கு மற்றும் பணிப்பெண்ணுக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் அவர்கள் அனைவரும் கொழும்பு ஐ.டி.எச் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடதக்கது.