கொழும்பு மாவட்டத்தில் ஐந்து பொலிஸ் பிரிவுகளுக்கு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தல் பொலிஸ் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதன்படி மட்டக்குளி, முகத்துவாரம், வெல்லம்பிட்டி, புளூமெண்டல் மற்றும் கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் இந்த ஊரடங்கு உத்தரவானது அமுல்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

மேலும், குறித்த தனிமைப்படுத்தல் பொலிஸ் ஊரடங்கானது, எதிர்வரும் திங்கட் கிழமை(26.010.2020) காலை 5.00 மணி வரை நீடிக்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.