நாட்டில் நேற்றையதினம் 167  பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

அத்துடன்  மினுவாங்கொடை கொவிட்-19 கொத்தணிப் பரவலுடன் தொடர்புடைய 166 பேருக்கும் வெளி நாட்டிலிருந்து நாடுதிரும்பிய ஒருவருக்கும் இவ்வாறு கொரோனா தொற்று  உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்து மினுவாங்கொடை கொத்தணிப் பரவலுடன் தொடர்புடைய கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையும் 2,464  ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை,  நட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 5,978 ஆக உயர்வடைந்துள்ளதுடன்  2,464 தொற்றாளர்கள் தற்போது நாடு முழுவதும் உள்ள 21 கொரோனா தொற்றுக்கான வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அத்துடன் நாட்டில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளா 3,501பேர் குணமடைந்தும் 13 பேர் உயிரிழந்தும் உள்ளனர்.

அதேநேரம் வைரஸ் தொற்று சந்தேகத்தின் பேரில் 356 பேர் வைத்திய கண்காணிப்பில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.