நடிகர் விஜய்சேதுபதியின் மகளுக்கு டுவிட்டரில் பாலியல் மிரட்டல் விடுத்த நபர் இலங்கையைச் சேர்ந்தவராக இருக்கலாம் என இந்திய பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.

இலங்கை‌ கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்று படமான '800' திரைப்படத்தில் நடிப்பது குறித்து  விஜய் சேதுபதிக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இதனையடுத்து அத்திரைப்படத்திலிருந்து விஜய் சேதுபதி விலகுவதாக அறிவித்திருந்தார்.

விஜய் சேதுபதியின் மகளுக்கு மிரட்டல் விடுத்தவர் இலங்கை நபர் ? | A Srilankan  man is suspected to threaten in abusing Vijay Sethupathi's daughter |  Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News ...

இந்நிலையில், ரித்திக் என்ற பெயரில் உள்ள டுவிட்டர் பக்கத்தில், ஒருவர் விஜய்  சேதுபதியின் மகளுக்கு பாலியல் மிரட்டல் விடுத்திருந்தமை  மேலும் ஒரு சர்ச்சையை உருவாக்கியிருந்தது.

இதற்கு எதிராக பல தப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், இந்திய பொலிஸார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து குறித்த நபரை தேடி வலை விரித்தனர்.

இவ்வாறு மிரட்டல் விடுத்த நபரின் டுவிட்டர் ஐ.பி. முகவரியை கொண்டு சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர்கிரைம் பொலிஸ் பிரிவினர் விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.

இதில் குறித்த நபரின் டுவிட்டர் ID இலங்கையிலிருந்து இயக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. இதையடுத்து, இலங்கையில் விசாரணை நடத்துவதற்காக இண்டர்போலின் உதவியை நாடும் முயற்சியில் இந்திய சைபர் கிரைம் பொலிஸ் பிரிவு ஈடுபட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.