(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

ஜனாதிபதி கோத்தபாய ராஜபக் ஷ இந் நாட்டின் வரலாற்றில் முன்னுதாரண புருசராக பதியப்படவேண்டும்.  அதற்கு அவர் முயற்சிக்க வேண்டும். என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட எம்.பி.யான  கோவிந்தன் கருணாகரம் பாராளுமன்றத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற 20 ஆவது திருத்தம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில்  தெரிவித்தார்.

Many projects begun in first 100 days of Gotabaya Presidency

அவர் மேலும் பேசுகையில்,

பௌத்த  பீடங்களே ஆமோதிக்காத திருத்தம் இது. அப்படியெனில்  இருபதாவது யாருக்காக? சிங்கள மக்களின் நலனுக்காகவா? அல்லது பௌத்தமத  நலனுக்காகவா? அல்லது அதிகாரம் மிக்கவரின் அதிகாரத்தை பலப் படுத்தவா? அல்லது அண்ணனை பலவீனப்படுத்தவா?

இந்த  20ஆ வது திருத்தத்தில்  அதிகாரக்குவிப்பை தவிர்த்து  அர்த்தமுடன் கூடிய  அதிகாரப் பரவலாக்கல் சரத்துக்களை இணைத்து நாட்டின் பல்லின, பல்மத, இரு மொழி  சமத்துவத்தை ஏற்கக்கூடிய திருத்தங்களை ஏற்படுத்த முயற்சிக்க வேண்டும். 

அதனூடாக ஜனாதிபதி கோத்தபாய ராஜபக் ஷ இந் நாட்டின் வரலாற்றில் முன்னுதாரண புருசராக பதியப்படவேண்டும்.  அதற்கு அவர் முயற்சிக்க வேண்டும். அப்படி அவர் செய்தால் இந் நாட்டின் அரசியல் தலைவர்களில் புதியதொரு  தேச பிதாவாக அவர் மிளிர்வார். இல்லையெனில் அவரது வரலாறு நடுநிலை  வரலாற்றாசிரியர்களால் வேறு விதமாகவே பதிவு செய்யப்படும் என  தெரிவித்தார்.