களுத்துறை மாவட்டத்தில் அகலவத்தை மற்றும்   பாலிந்தநுவர ஆகிய  பிரதேச செயலகத்திற்குட்பட்ட 6 கிராமசேவகர் பிரிவுகள் மறு அறிவித்தல் வரை தனிமைப்படுத்தப்படுத்தப்பட்டுள்ளதாக கொவிட் கட்டுப்படுத்தலுக்கான தேசிய செயட்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய அகலவத்த பிரதேச செயலகத்திற்குட்பட்ட அகலவத்த, பொரக்கொட,  பேரகம,  தாபிலிகொட மற்றும் கெகுலந்தர வடக்கு ஆகிய பிரதேசங்கள் இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. 

இதே வேளை பாலிந்தநுவர பிதேச செயலகத்தில் பெல்லன கிராம சேவகர் பிரிவும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.