தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ள கம்பஹா மாவட்டத்தின் ஊடாக பயணிப்பதற்கு வாகனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கம்பஹா மாவட்டம் முழுவதும் இன்று முதல் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.

இன்று புன்கிழமை(21.10.2020) இரவு 10.00 மணிமுதல் திங்கட்கிழமை(26.010.2020) அதிகாலை 05.00 மணிவரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இவ்வாறு தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ள கம்பஹா மாவட்டத்தின் ஊடாக பயணிப்பதற்கு வாகனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், ஆனால்  எந்த வாகனங்களையும் அங்கு நிறுத்துவது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.