ஐ.பி.எல். கிரிக்கெட் வரலாற்றில் அடுத்தடுத்து இரண்டு சதங்களை விளாசி டெல்லி கெப்பிட்டல்ஸ் அணியின் ஷிகர் தவான் புதிய சாதனை படைத்துள்ளார்.

சென்னை அணிக்கு எதிரான போட்டியில் சதம் அடித்த ஷிகர் தவான்,  பஞ்சாப் அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற போட்டியிலும் சதம் அடித்து அசத்தினார். 

இதன்மூலம் மூலம் ஐ.பி.எல். வரலாற்றில் அடுத்தடுத்து இரண்டு சதங்களை விளாசிய முதல் வீரர் என்ற சாதனையை ஷிகர் தவான் படைத்துள்ளார்.

இதேவேளை, ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் அத்தியாயமொன்றில் ஒன்றுக்கும் மேற்பட்ட சதம் அடிக்கும் இரண்டாவது இந்தியர் என்ற பெருமை ஷிகர் தவான் பெற்றுக்கொண்டார்.

 இதற்கு முன்னர், ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணித்தலைவரான விராட் கோஹ்லி 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல். தொடரில் 4 சதங்களை விளாசியிருந்தமை குறிப்பிடத்தக்கது.