ஆப்பானிஸ்தானின் கிழக்கு நகரமான ஜலாலாபாத்தில் ஏற்பட்ட சன நெருக்கடியில் சிக்கி 15 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஜலாலாபாத்தில் அமைந்துள்ள பாகிஸ்தான் தூதரகத்திற்கு வெளியே விசா விண்ணப்பிப்பதற்காக செவ்வாயன்று கூடியிருந்த ஆயிரக் கணக்கான நபர்களுக்கிடையே ஏற்பட்ட நெரிசல் காரணமாக இந்த உயிரழப்புகள் ஏற்பட்டுள்ளன. 

அதன்படி விசாவுக்கு விண்ணப்பிக்க தேவையான டோக்கன்களை சேகரிக்க சுமாமர் 3,000 ஆப்கானியர்கள் தூதரகத்திற்கு வெளியே திறந்த வெளியில் கூடியிருந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது.