எல்பிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அனுருத்தகம பகுதியில் செவ்வாயன்று கூரிய ஆயுதத்தால் தாக்கி இளைஞரொருவர் கொலை  செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அதே பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே இந்த கொலையைச் செய்துள்ளார். தாக்குதலில் படுகாயமடைந்த நபர் எல்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

எல்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 22 வயதான இளைஞரொருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் அதே பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயதுடையவர் என்று அடையாளங்காணப்பட்டுள்ளார். சந்தேக நபர் தலைமறைவாகியுள்ள நிலையில் அவரை கைது செய்வது தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருவதாக பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.