தலைநகர் டெல்லி மற்றும் ஏனைய வடக்கு நகரங்களில் கடந்த இரண்டு வாரங்களில் காற்றின் தரம் வேகமாக மோசமடைந்துள்ளமையினால் இந்தியாவில் காற்று மாசுபாடானது அபாயகரமான நிலையினை எட்டியுள்ளது.
கொரோனா வைரஸுக்கு எதிரான இந்தியாவின் போராட்டத்தில் இது ஒரு மிகவும் கவலையான செய்தி என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளானர்.
காரணம் உலகெங்கிலும் பல ஆய்வுகளில் கொவிட்-19 நோயாளர்கள் உயிரிழப்பதற்கு காற்றின் தரக் குறைவும் காரணம் என்றும் கூறப்படுகிறது.
ஒரு கியூபிக் மீட்டர் பரப்பளவில் உள்ள காற்றில் ஒரே ஒரு மைக்ரோகிராம் அளவுக்கு, மாசை உண்டாக்கும் பி.எம் 2.5 துகள்கள் அதிகரித்தாலும் கொரோனா வைரஸால் ஏற்படும் உயிரிழப்பு விகிதம் 8 சதவீதம் அதிகரிக்கும் என அமெரிக்காவின் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
வாகனங்களில் இருந்து வெளியேறும் புகைகள், சுத்திகரிக்க முடியாத எரிபொருட்களை பயன்படுத்தும் போது வெளியாகும் புகைகள் மற்றும் வயல்களுக்கு தீ வைப்பதனால் உண்டாகும் புகைகள் உள்ளிட்டவற்றில் இருந்து வெளியாகும் ஓசோன், நைட்ரஜன் ஆக்சைடு உள்ளிட்ட மாசுகளுக்கு நீண்டகாலம் ஆளாவதற்கும், அவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் தீவிரமாவதற்கும் தொடர்பு இருப்பதாக பிரிட்டனில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
இத்தகைய மாசுகள் மூச்சுக் குழாயை இலக்கு வைத்து பாதிக்கும் வைரஸ் தொற்றுக்களின் தீவிரத்தன்மையை அதிகரிக்கும் மற்றும் அழற்சியை உண்டாக்கும் என்று கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
அண்மைய வாரங்களில் டெல்லியின் காற்றில் உள்ள பி.எம் 2.5 துகள்களின் அளவு 180 முதல் 300 மைக்ரோகிராம் வரை உள்ளது. இது உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள பாதுகாப்பு வரம்பை விட 12 மடங்கு அதிகம்.
முடக்க நிலை அமுல்படுத்தப்பட்ட காலத்தில் வாகன போக்குவரத் மற்றும் தொழில் நடவடிக்கை எதுவும் இல்லாததால் அண்மைய மாதங்களாக டெல்லியில் குடியிருப்பவர்கள் மிகவும் தூய்மையான காற்றை சுவாசித்து வந்தார்கள். ஆனால் தற்போது அந்த நிலை மாறியுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM