விஜய் சேதுபதியுடன் மீண்டும் இணையும் ராசி கண்ணா

Published By: J.G.Stephan

21 Oct, 2020 | 11:37 AM
image

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்து வரும் 'துக்ளக் தர்பார்' என்ற படத்தில் நடிகை ராசி கண்ணா நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.

அறிமுக இயக்குனர் டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்கத்தில் தயாராகி வரும் திரைப்படம் 'துக்ளக் தர்பார்'. இந்தப் படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்க 'சைக்கோ' பட புகழ் நடிகை அதிதி ராவ் ஹயாத்ரி ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஆனால் கொரோனா காரணமாக படப்பிடிப்பு இடைநிறுத்தம் செய்யப்பட்டது.



இதனால் அவருடைய கால்ஷீட் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதன் காரணமாக அவருக்கு பதிலாக நடிகை ராசி கண்ணா ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். நடிகை ராசி கண்ணா, மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ' சங்க தமிழன்' என்ற படத்தில் இணைந்து நடித்து இருக்கிறார்.

இப்படத்தில் பார்த்திபன், மஞ்சிமா மோகன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு, கோவிந்த் வசந்தா இசை அமைக்கிறார்.

இப்படம் பொங்கல் திருவிழாவின் போது வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right