சோமாலியத் தலைநகரில் குண்டுத் தாக்குதல்

By Vishnu

21 Oct, 2020 | 11:08 AM
image

சோமாலியாவின்  மொகடிஷுபகுதியில் குடிவரவு மற்றும் இயற்கைமயமாக்கல் சேவையின் தலைவரை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் இருவர் உயிரிழந்ததுடன், மேலும் மூவர் காயமடைந்துள்ளதாக அந் நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தலைநகரில் பரபரப்பான KM4 சந்திக்கு அருகிலேயே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது. 

குடிவரவு மற்றும் இயற்கைமயமாக்கல் சேவையின் தலைவர் மொஹமட் ஏடன் கோஃபியை இலக்கு வைத்து இந்த தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக துருக்கிய செய்தி நிறுவனத்திடம் அரசாங்க செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் முக்தார் ஒரோன்ஜோ உறுதிப்படுத்தியுள்ளார்.

தாக்குதலில் இருந்து அவர் தப்பியபோதும், இருவர் உயிரிழந்ததுடன், மூன்று பாதுகாப்பு அதிகாரிகள் காயமடைந்துள்ளதாகவும் ஒரோன்ஜோ சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த தாக்குதலுக்கு எந்த குழுவும் இதுவரை பொறுப்பேற்கவில்லை. எனினும் சோமாலியை தளமாகக் கொண்ட அல்-கொய்தாவுடன் இணைந்த அல்-ஷபாப் பயங்கரவாத குழு இந்த தாக்குதலை நடத்தியிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிரச்சினைகளுக்கு தீர்வுகாண்பதில் இந்தியா - ஜப்பான்...

2022-09-29 16:28:26
news-image

பிரதமர் மோடியின் ஆலோசனைக்கு பிளிங்கன் பாராட்டு

2022-09-29 16:30:59
news-image

உலகத்துக்கான பாதுகாப்பு தயாரிப்புகளை உருவாக்குங்கள் -...

2022-09-29 16:22:02
news-image

சிட்னியில் ஆபத்தான கரும்பு தேரைகளால் அச்சம்

2022-09-29 14:57:25
news-image

ஆங் சாங் சூகியின் பொருளாதார ஆலோசகரான...

2022-09-29 14:31:59
news-image

உக்ரேனில் கைப்பற்றிய பகுதிகளை இணைக்கிறது ரஷ்யா

2022-09-29 13:08:24
news-image

பாக்கிஸ்தான் பொலிஸார் எதிர்நோக்கும் புதிய நெருக்கடி-...

2022-09-28 16:04:03
news-image

தலைமுடியை வெட்டி ஹிஜாப் போராட்டத்திற்கு ஆதரவு...

2022-09-28 16:02:57
news-image

பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கு...

2022-09-28 15:11:59
news-image

சவுதி அரேபியாவின் பிரதமராக இளவரசர் முகமது...

2022-09-28 11:17:49
news-image

வீட்டுக் காவல் வதந்திக்கு பிறகு முதன்...

2022-09-28 10:44:04
news-image

ரஷ்யாவில் கொரோனா தொற்று திடீர் அதிகரிப்பு

2022-09-28 09:21:33