தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட கொழும்பு, கோட்டை பொலிஸ் நிலையத்தின் சேவைகள் கிருமி நீக்கம் செய்யப்பட்டதன் பின்னர் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

குறித்த பொலிஸ் நிலைய வளாகத்தில் அமைந்துள்ள மேல் மாகாண சிறப்பு புலனாய்வுப் பிரிவில் சேவையாற்றும் ஒரு பொலிஸ் இன்ஸ்பெக்டர் நேற்று கொரோனா தொற்றுக்குள்ளாகியமை உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் இவ்வாறு சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்தன.

இதன் பின்னர் அனைத்து பொலிஸ் அதிகாரிகளும் பொலிஸ் நிலைய வளாகத்திலிருந்து வெளியேற்றப்பட்டதையடுத்து கிருமி நீக்கம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந் நிலையிலேலேய கொழும்பு, கோட்டை பொலிஸ் நிலையம் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

குறித்த பொலிஸ் நிலையத்தில் சேவையாற்றுவதற்காக ஏனைய பொலிஸ் நிலையங்களிலிருந்து அதிகாரிகள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா தொற்றுக்குள்ளான பொலிஸ் அதிகாரியுடன் தொடர்புகளை பேணிய எட்டுப் பேர் தனிமைப்படுத்தலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் பொலிஸ் நிலையத்தின் 48 பொலிஸ் அதிகாரிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

பொலிஸ் நிலைத்துடன் இணைக்கப்பட்ட மற்ற அதிகாரிகள் தங்களது அவர்களது தங்குமிடங்கள் மற்றும் விடுதிகளில் சுய தனிமைப்படுத்திக் கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.