கொழும்பு களுபோவில வைத்தியசாலையில் கொரோனா சிகிச்சை பிரிவில் பணியாற்றிய ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அந்தவகையில் கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்ட குறித்த நபர் கொஸ்கம கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

அத்தோடு கொரோனா தொற்றுடைய நபரிடம் நெருங்கிய தொடர்புளை பேணிய 16 ஊழியர்கள் மீது பி.சி.ஆர் சோதனைகள் நடத்தப்பட்டுள்ளதாகவும் கொழும்பு தெற்கு போதனா வைத்தியாசலை வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

அத்தோடு கொரோனா தொற்றால் பாதிக்கப்ட்ட நபர் மினுஙாக்கொட கொரோனா கொத்தணியுடன் இணைக்கபடவில்லையெனவும்  தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் வைத்தியசாலையில் நடவடிக்கைகள் வழமைப்போல் இயங்குவதாகும் வைத்திய வட்டாரம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.