காவலில் இருந்தபோது இளைஞன் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக இடைநீக்கம் செய்யப்பட்டு, கைதுசெய்யப்பட்ட பூகொட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஒக்டோபர் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

21 வயதுடைய இளைஞன் பூகொட பொலிஸ் காவலிலிருந்த போது திடீர் உடல் நலக் குறைவு காரணமாக கடந்த ஒக்டோபர் 12 ஆம் திகத றாகமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.

அதன் பின்னர் உயிரிழந்த இளைஞனின் மரணம் குறித்து பல விசாரணைகள் நடத்தப்பட்டு, ஒரு பொலிஸார் சார்ஜண்ட் உட்பட மொத்தம் 8 பொலிஸார் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

மேலதிக விசாரணளைத் தொடர்ந்து பூகொட பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரியும் கைதுசெய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.