(எம்.மனோசித்ரா)

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பாதுகாப்பு செயலாளராக பதவி வகித்த போது இலங்கைக்கு அழுத்தம் பிரயோகித்த இராஜதந்திர தூதுவர்களுக்கு மிகவும் கடுமையாகஎமது நாடு சுயாதீனத்தன்மையும் இறையான்மையும் உடையது என்பதைக் காண்பித்தார். தற்போது அவரே ஜனாதிபதி ஆசனத்தில் அமர்ந்துள்ளார். எனவே இலங்கை ஒருபோதும் வெளிநாட்டு சக்திகளுக்கு அடிபணியாது என்ற தீர்க்கமான உத்தரவாதத்தை வழங்குவதாக அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிப்பதற்கான செய்தியாளர் மாநாடு இன்று செவ்வாய்கிழமை இணைவழி மூலம் இடம்பெற்றது. இதன் போதே இணை பேச்சாளர் உதய கம்மன்பில இதனைத் தெரிவித்தார்.

உதய கம்மன்பிலவின் மனு தொடர்பான விசாரணை ஜீன் 23 இல் | Virakesari.lk

அவர் மேலும் கூறுகையில் ,

கேள்வி : தற்போதை அரசாங்கம் எம்.சி.சி. ஒப்பந்தத்தில் ஒருபோதும் கையெழுத்திடப் போவதில்லை என்று பல சந்தர்ப்பங்களில் உறுதியளித்துள்ளது. இம்மாத இறுதியில் நாட்டுக்கு வரவுள்ளதாக கூறப்படும் அமெரிக்க உயர்மட்ட பிரதிநிதி இதனை நடைமுறைப்படுத்துமாறு அழுத்தம் பிரயோகித்தால் அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன ?

பதில் : 2009 இல் பிரித்தானியாவின் வெளிநாட்டலுவல்கள் செயலாளரும் , பிரான்சின் வெளிநாட்டுறவுகள் அமைச்சரும் இலங்கைக்கு வந்து யுத்தத்தை நிறுத்துமாறு அழுத்தம் பிரயோகித்தனர். ஆனால் யுத்தம் நிறுத்தப்படவில்லையல்லவா? எனவே தற்போதைய அரசாங்கம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சர்வதேசத்தின் அழுத்தங்களுக்கு அடிபணியாது என்பதை உறுதியாகக் கூறுகின்றேன்.

தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பாதுகாப்பு செயலாளராக இருந்த போது தமக்கு அழுத்தம் பிரயோகிப்பதற்காக வந்த இராஜதந்திர தூதுவர்களுக்கு மிகவும் கடுமையாக இலங்கை சுயாதீனத்தன்மையும் இறையான்மையும் உடைய நாடு என்பதைக் காண்பித்தார். 

தற்போது அவரே ஜனாதிபதியாகவுள்ளார். எனவே இலங்கை ஒருபோதும் வெளிநாட்டு சக்திகளுக்கு அடிபணியாது என்ற தீர்க்கமான உத்தரவாதத்தை எம்மால் வழங்க முடியும் என்றார்.

கெஹெலிய ரம்புக்வெல்ல  

20 தொடர்பில் இந்தியா ஏதேனும் அழுத்தங்களை பிரயோகித்துள்ளதா ? என்ற கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல , ' அமைச்சர் உதய கம்மன்பில ஏற்கனவே இது குறித்து தெளிவுபடுத்தியிருந்தார். இலங்கை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் வெளிநாடுகளின் அழுத்தங்களுக்கு அடிபணியாது. எமது நாட்டின் இறையான்மையை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கும் அரசாங்கமாகவே நாம் செயற்படுவோம். ' என்று பதிலளித்தார்.

பொட்டம்மானின் இரண்டாம் நிலை தலைவருக்கு சம்பளம் வழங்கியதாம் மகிந்த அரசு - கெஹெலிய  ரம்புக்வெல்ல பகீர் - Today Jaffna News - Jaffna Breaking News 24x7

அவரிடம் அமெரிக்க செயலர் வருகை குறித்து கேட்கப்பட்ட போது ,

கேள்வி : அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் உள்ளிட்ட குழுவினர் மாத இறுதியில் நாட்டுக்கு வரவுள்ளதாக கூறப்படுகிறது. அவரது வருகை உறுதிப்படுத்த முடியுமா ? அவர்கள் தனிமைப்படுத்தல் விதிமுறைகளைப் பின்பற்றுவார்களா ?

பதில் : அவரது வருகை அரசாங்கத்தால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. நாட்டின் பொருளாதாரத்தை முன்கொண்டு செல்ல வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. எனவே அந்த காரணியையும் கவனத்தில் கொண்டு சுகாதாரத்துறையினரின் ஆலோசனைகளையும் கவனத்தில் கொண்டு அவரது வருகை தொடர்பான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.

வெளிநாட்டிலிருந்து வரும் இராஜதந்திரகள் 24 மணித்தியாலங்கள் மாத்திரமே நாட்டில் தங்கியிருப்பார்களாயின் அவர்களை ஒரே இடத்தில் சந்தித்து உரிய நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான செயற்தி;ட்டம் சுகாதார அமைச்சின் அனுமதியுடன் முன்னெடுக்கப்படுகிறது. அதற்கமையவே அவரது வருகையும் அமைந்துள்ளது என்றார்.