தொடரும் 800 பட சர்ச்சை : விஜய் சேதுபதியின் மகளுக்கு பாலியல் மிரட்டல்!

By Jayanthy

20 Oct, 2020 | 09:57 PM
image

இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்படவுள்ள ‘800’ படத்தில் விஜய் சேதுபதியை நடிக்க வேண்டாம்  என அரசியல் தலைவர்களும், சினிமா பிரபலங்களும் ரசிகர்கள் பலரும் தொடர்ந்து வலியுறுத்தினர்.

இந்நிலையில், நடிகர் விஜய்சேதுபதியின் மகளுக்கு நெட்டிசன் ஒருவர் டுவிட்டரில் பாலியல் மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

இதற்கு கனிமொழி, பிரேமலதா விஜயகாந்த், குஷ்பு, சின்மயி உள்ளிட்ட பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து, சமூக வலைத்தளத்தில் அவதூறாக பேசியவர் மீது இந்திய மத்திய குற்றப்பிரிவு போலிசார்  3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

Chennai police files case against the one who threatens Vijay Sethupathis daughter

சென்னை மாநகர காவல் துறை ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்