(ஆர்.யசி.எம்.ஆர்.எம்.வஸீம்)

தனிமைப்படுத்தல் சட்டத்தினால் பாதிக்கப்பட்டிருக்கும் கம்பஹா மாவட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதுபோல் வடக்கு மாகாணத்தில் பாதிக்கப்பட்ருக்கும் மக்களுக்கும் அரசாங்கத்தின் நிவாரணத்தை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.

கொரோனா தொற்று காரணமாக வடக்கு மாகாணத்திலும் பல பிரதேசங்கள் முடக்கப்பட்ருக்கின்றன. இதன் காரணமாக நூற்றுக்கணக்கான குடும்பங்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றன. 

குறிப்பாக மன்னார் மாவட்டத்தில் 292 குடும்பங்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றன. இவர்களுக்கான அரசாங்கத்தின் நிவாரணங்கள் எதுவும் இதுவரை வழங்கப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

பாராளுமன்றத்தில் இன்று இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சட்டத்தின் கட்டளைகள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.