இந்தியாவுக்கு வந்த சோதனை; பெப்ரவரி மாதத்திற்குள் 50 சதவிகிதம் பேருக்கு கொரோனா தொற்றலாம்

Published By: Digital Desk 3

21 Oct, 2020 | 09:35 AM
image

இந்தியாவின் மக்கள் தொகை 130 கோடி பேரில் குறைந்தது பாதி பேர் அடுத்த பெப்ரவரி மாதத்திற்குள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக  இந்திய மத்திய அரசின் நிபுணர் குழுவின் உறுப்பினர்  தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் இதுவரை 75.5 லட்சம் பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இது மொத்த தொற்றுநோய்களின் அடிப்படையில் அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்திலுள்ளது.

ஆனால் செப்டம்பர் நடுப்பகுதியில் கொரோனா தொற்று உச்சத்திற்குப் பிறகு இந்தியாவில் கொரோனா நோய்த்தொற்றுகள் குறைந்து வருகின்றன, ஒவ்வொரு நாளும் சராசரியாக 61,390 புதிய கொரோனா பாதிப்புகள் பதிவாகின்றன.

கான்பூரில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் பேராசிரியரும் நிபுணர் குழு உறுப்பினருமான மனிந்திர அகர்வால் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளதாவது,

எங்கள் கணித மாதிரி ஆய்வில் தற்போது 30 சதவீத  மக்கள் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், இது பெப்ரவரி மாதத்திற்குள் 50 சதவீதம் வரை உயரக்கூடும் என தெரிவிக்கிறது.

வைராலஜிஸ்டுகள், விஞ்ஞானிகள் அடங்கிய பிற நிபுணர் குழு, அதன் அறிக்கை ஞாயிற்றுக்கிழமை பகிரங்கப்படுத்தப்பட்டது, ஒரு கணித மாதிரியை நம்பியுள்ளது.

"நாங்கள் ஒரு புதிய மாதிரியை உருவாக்கியுள்ளோம், இது பதிவு செய்யப்படாத நோய் பாதித்தவர்களை வெளிப்படையாக கணக்கில் எடுத்துக்கொள்கிறது, எனவே பாதிக்கப்பட்டவர்களை இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கலாம் அறிக்கையிடப்பட்ட பாதிப்புகள் மற்றும்  அறிக்கை செய்யப்படாதவை" என்று அகர்வால் கூறினார்.

வைரஸின் தற்போதைய பரவலுக்கான குழுவின் மதிப்பீடு மத்திய அரசின் செரோலாஜிகல் கணக்கெடுப்புகளை விட மிக அதிகமாக உள்ளது. செரோலாஜிகல் கணக்கெடுப்பு  செப்டம்பர் மாத நிலவரப்படி சுமார் 14 சதவீத மக்கள் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதைக் காட்டுகிறது.

முன்னெச்சரிக்கைகள் பின்பற்றப்படாவிட்டால் அவர்களின் கணிப்புகள் நீடிக்காது என்றும், சமூக விலகல் மற்றும் முககவசம் அணிவது போன்ற நடவடிக்கைகள் புறக்கணிக்கப்பட்டால் ஒரே மாதத்தில் பாதிப்புகள் 26 இலட்சம் வரை  அதிகரிக்கும் என்றும் நிபுணர் குழு எச்சரித்து உள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52
news-image

இந்தோனேசியாவில் வெடித்து சிதறும் எரிமலை ;...

2024-04-18 11:01:39
news-image

முன்னாள் ஜனாதிபதி டுடெர்டேவை சர்வதேச நீதிமன்றத்தில்...

2024-04-17 19:37:05
news-image

தமிழக தேர்தல் நிலவரம் - தந்தி...

2024-04-17 16:09:34
news-image

தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்களின் அனல் பறக்கும்...

2024-04-17 15:18:32
news-image

“என் பெயர் அரவிந்த் கேஜ்ரிவால்... நான்...

2024-04-17 12:10:07
news-image

இஸ்ரேலிய படையினர் ஆக்கிரமித்திருந்த அல்ஸிபா மருத்துவமனைக்குள்...

2024-04-17 11:44:07
news-image

உக்ரைன் யுத்தம் - ரஸ்யா இதுவரை...

2024-04-17 11:08:10