கொழும்பு - கோட்டை பொலிஸ் நிலைய பொலிஸ் பரிசோதகர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அத்தோடு குறித்த பொலிஸ் அதிகாரியுடன் நெருங்கிய தொடர்பினை பேணியவர்களை தனிமைப்படுத்தியுள்ளதோடு , மேலும் அவருடன் தொடர்புகளை பேணியவர்களை  கண்டறிய விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மினுவாங்கொட கொத்தணியில் 60 பேருக்கு இன்று தொற்று உறதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.