இஸ்ரேலுக்கான முதல் உத்தியோகபூர்வ விஜயத்தின் ஒரு பகுதியாக செவ்வாய்க்கிழமை காலை ஐக்கிய அரபு எமிரேட்ஸின் உயர்மட்டக் குழுவொன்று டெல் அவிப் நகருக்கு சென்றுள்ளது.

இஸ்ரேல் - ஐக்கிய அரபு எமிரேட்ஸிக்கிடையிலான உறவுகளை சீராக்குவதற்கு அமெரிக்க ஏற்பாடு செய்த தரகு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டதன் பின்னர் அமைந்துள்ள ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிகாரிகளின் முதல் விஜயமாக இது கருதப்படுகிறது.

விசா இல்லாத பயணத்திற்கு இஸ்ரேலும் ஐக்கிய அரபு எமிரேட்ஸும் ஒப்புக் கொண்டுள்ளதாகவும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்துள்ளார்.

செப்டம்பர் 15 அன்று வெள்ளை மாளிகையில் பஹ்ரைனுடன் சேர்ந்து வரலாற்று சமாதான ஒப்பந்தத்தில் மேற்கண்ட இரு நாடுகளம் கையெழுத்திட்ட பின்னர், இஸ்ரேலுக்கான முதல் உத்தியோகபூர்வ விஜயத்துக்காக  ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து ஒரு உயர் பதவிக் குழு டெல் அவிவ் வந்து சேர்ந்ததுள்ளமை குறிப்பிடத்தக்கது.