பேராதனிய பகுதியில் ஹெரொயின் மற்றும் கஞ்சா போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் பெண் ஒருவர் உட்பட 19 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கண்டி பொலிஸ் தலைமையக குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த 19 பேரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

ஹெரொயின் வைத்திருந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் 14 பேரும், கஞ்சா போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில்  5 பேரையும்  குற்றத்தடுப்பு பிரிவினர் கைதுசெய்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்டவர்களில் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரின் மகனும், பொலிஸ் பரிசோதகர் ஒருவரின் மகனும் அடங்குவதாக குற்றத்தடுப்பு பிரிவினர் தெரிவித்தனர்.

இதேவேளை குறித்த சந்தேக நபர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், மேலதிக விசாரணைகளை குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.