பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கும், கொரிய பிரதமர் சுங் சை-கியுனுக்கும்  இடையில் தொலைபேசி மூலமான கலந்துரையாடலொன்று இன்று (2020.10.20) இடம்பெற்றுள்ளது. 

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ,கொரிய பிரதமர் சுங் சை-கியுன்

இதன்போது இருதரப்பு உறவை மேம்படுத்தல், கல்வி, முதலீடு மற்றும் சுற்றுலாத்துறை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளன.

இது குறித்து பிரதமர் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில்,

இன்று காலை தொலைபேசி அழைப்பு எடுத்த கொரிய பிரதமர் சுங் சை-கியுனுக்கு நன்றி கூறுகிறேன். பரஸ்பர நலன்களின் பகுதிகளை மேம்படுத்துவதில் ஒரு உற்பத்தி பரிமாற்றம் இருந்தது. கடல்சார் பல்கலைக்கழகம், முதலீடு மற்றும் சுற்றுலாவுக்கான தொழில்நுட்ப உதவி முன்னுரிமைகள் ஆகியன கலந்துரையாடப்பட்டன. நான் இலங்கைகையை பார்வையிட கொரிய பிரதமருக்கு அழைப்பு விடுத்துள்ளேன். என தெரிவித்துள்ளார்.